Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 SEP 1996
இறப்பு 18 JUN 2013
அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்
வயது 16
அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத் 1996 - 2013 Winterthur, Switzerland Switzerland
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி. 

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின்
கருவறையில் இப்புவியில் உதித்த
செல்கதிர் சுடரே ஆண்டு 13 கடந்த
பின்பும் ஓயவில்லை நினைவலைகள்....

மகனே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம் இருண்டு
போய் உள்ளதைய்யா.!

வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை மனம் விட்டுப்
பேசவும் இன்று நீ இல்லை என்
செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்

எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது? கண்
இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!

அன்னை தந்தைக்கு ஆசைக்கோர்
மகனாய் அவதரித்த எம் அன்பு செல்லமே....

ஐயகோ! இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்ட
உன்னை காலன் பறித்தானோ! 

நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு குடும்பத்தினார்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos