

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பின் இரகசியம் யாதென
கேட்டேன் பிறந்து பார் என
இறைவன் பணிந்தான்...
பாசம் யாதென கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன்
பணிந்தான்....!!
பொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழிதீர்த்தானோ....
சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில் வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடிந்து சென்றது....
எம் அன்புச் செல்லம் நீ எமை
விட்டு பிரிந்து யுகமேயானாலும்
உன் பசுமையான நினைவுகள் ஏராளம்
எம் மனதை விட்டு அகலாது...
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனவு
ஏராளம்..
கண்மூடி விழிப்பதற்குள்
கனப் பொழிதில் நடந்தவைகள்
நிஜம் தனா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ..!
நீ வான் உயரத்தில் தெயவத்தில் ஒன்றாகி
நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்...!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி.....!!!
We miss you! You will always be remembered in our hearts 🕯 ❤️