Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 14 FEB 1930
உதிர்வு 11 APR 2022
அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா 1930 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 07-04-2025

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே எங்கள்
இதயங்களில் கோயிலாய்
வாழ்கின்ற அம்மாவே!

நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே நீங்கள் எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
பொற்காலம் அம்மா!

அகவை மூன்று அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே எங்கள்
உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்