Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 APR 1945
மறைவு 15 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் 1945 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:-  19/09/2024

ஆண்டுகள் ஐந்து உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்