Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1932
இறப்பு 14 JAN 2020
அமரர் வேலும்மயிலும் நவமணி அம்மா (குண்டுமணியக்கா)
வயது 87
அமரர் வேலும்மயிலும் நவமணி அம்மா 1932 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் நவமணி அம்மா அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஈஸ்வரி அம்மா, ராமச்சந்திரன், ஜெயசந்திரன், ரவிச்சந்திரன், ஜெயலட்சுமி, கிருபாலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நாராயணசாமி மற்றும் சிவகணேசமூர்த்தி, புஸ்பராணி, ஜெயமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருமைச்செல்வம் மற்றும் மோனகுரு, இளையபெருமாள், கலாதேவி, விஜயலட்சுமி, திலகவதனா(குட்டியம்மன்) ஆகியோரின் மாமியாரும்,

பரணீதரன், ரூபி, பார்த்திபன், பிரபா, பாஸ்கரன், சாந்தி, பிரபாகரன், ரேகா, பரந்தாமன், கார்த்திகா, அஷோக், சுமங்கலி, பிரதிப், சரண்யா, லட்சுமி, குணாளன், பிரியா, ராஜாராம், பிரகாஷ், பூர்ணி, கஸ்தூரி, ரங்கன், துஷ்யந்தன், அனிஷா, சத்யா, திரு, திவ்யா, ஆஷா, தாட்ஷாயிணி, கோகுல், தர்ஷன், வர்ணன், சுஜிதா, ரஜிவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரித்தி, மது, சயன், சித்தாத், ஹரித், ஜனாத், அனுஸ்கா, தமனா, தவிரா, அஸ்மிதா, யுவி, நிலிஷ், நிஷால், நிஷித், அஸ்மிதா, அஸ்வின், அத்திகா, கோபிகா, இந்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் காட்டு வளவில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்