Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 NOV 1968
இறப்பு 05 MAR 2022
அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் (இந்திரன்)
வயது 53
அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் 1968 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் யூனிட் 9, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கணேசலிங்கம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
 மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
 ஆண்டு இரண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகளை நிதம் நிதம்
 நெஞ்சில் நினைத்து கண்ணீர்
சொரிவதைத் தவிர எம்மால்
ஏதும் செய்ய முடியவில்லையே அப்பா! .

 எங்களின் நிறைவே
உங்களின் வாழ்வு என்றபடி
ஆனந்தமாய் அன்பு நிறைவுடன்
வாழ வைத்த உங்களை காலன்
அவன் கவர்ந்து சென்று எம்மை
கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...

ஆறுதலை இனி யார் தருவார்
 என்றும் உங்கள் நினைவுகள்
சுமந்து உங்கள் வழியில்
 உங்கள் பிள்ளைகள் நாம்
 என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர், தெ.பரமகுருபரன் - மைத்துனர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Mar, 2022
நன்றி நவிலல் Tue, 05 Apr, 2022