எம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குமார்மாமாவின் இறப்பு ஈடு இணையற்றது . குமார் மாமா மறைந்தார் என்பதைவிட ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை இவ்வுலகம் இழந்து விட்டது என்பதுதான் உண்மை. அற்புதன்றி குடும்பம் பூக்களைையும்,காய்களையும்,கனிகளையும்,கொடுத்து செழித்து வளரும் ஒரு மரத்துக்கு இணையானது. இந்த மரத்தின் ஆணிவேர் நீங்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.''காய்க்கும் மரத்துக்குத்தான் கல் எறிவிழும்''அந்த காயங்களையும் கடந்து மீண்டும் மீண்டும் நன்மைகளையே கொடுத்த கனவான் நீங்கள். அன்பின் அடிப்படையே கொடுத்தலும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும். நல்ல கணவனாக, சிறந்த தந்தையாக,உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய உயர்ந்த மனிதனாக,ஆன்மீகப் பணியகத்தின் தலைவனாக,மதங்களையும் கடந்த மனித நேய பணியாளராக நீங்கள் வாழ்ந்த வாழ்வு உங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்க்கிறது. நீங்கள் இவ்வுலக வாழ்வை நேர்மையாகவும், நடுநிலை தவறாமலும் சீராக சிறப்பாக ஓடி முடித்த நிறைவு உங்களுக்கு உண்டு அதுவே எம் குடும்பத்தின் பெருமையும் கூட . உங்கள் மறைவு எமக்கு துயரமாக இருப்பினும் உங்கள் வாழ்வை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடி பெருமை அடைய வேண்டிய தருணம் இது. குமார் மாமா நீங்கள் இன்று விதையாக புதைக்கப்பட்டாலும் நாம் (எம் குடும்பம்) உங்கள் வழியில் மரமாக வளர்வோம் என்பது உறுதி. நீங்கள் தந்த செய்த அனைத்திற்கும் நன்றி.நீங்கள் விட்டுச் செல்லும் அன்பையும் மனித நேயத்தையும் வளர்ப்போம் இதுவே நாம் உங்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். எம் இறுதி சந்திப்பு எனக்கு மறக்க முடியாத பெரும் மகிழ்ச்சி. உங்களுக்கு நாம் வேண்டிய நத்தார் பரிசை நீங்கள் பெறுவதற்குள்ளேயே உங்கள் பிரிவுச் செய்தி கேட்டு மனமுடைந்து நிற்கின்றோம்.எம் கண்ணீர் துளிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றோம் நன்றி குமார் மாமா.🙏🙏🙏❤️❤️❤️