7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் துரைசாமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த ஐயா!
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் ஐயா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
ஐயா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே ஐயா!
நீங்கள் விட்டுச்சென்ற பணியை
பிள்ளைகளான நாம் செய்து முடிப்போம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்