Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1930
இறப்பு 05 JAN 2013
அமரர் வைத்தி கணபதிப்பிள்ளை
வயது 82
அமரர் வைத்தி கணபதிப்பிள்ளை 1930 - 2013 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டு சென்றும் பதறுகிறோம் ஐயா
 எம் பலம் குறைந்தது என்று கதறுகிறோம் ஐயா
உம் இழப்பு நடந்த பின்பு எம் உறவுகள்
ஒவ்வொரு இடமாய் சிதறியது ஐயா

 நீங்கள் அரசனாய் இருந்த போது நாங்கள்
 பயப்படாமல் வாழ்ந்தோம் ஐயா
என் குருவே நீங்கள் தந்த கலையையும்
உம்மையும் என்றும் மறவேன் ஐயா
அன்பு என்றால் என்ன என்பதையும் மற்றவருக்கு
உதவி செய்வதையும் உங்களிடம் கற்றோம் ஐயா,

 பாசத்தின் உறைவிடமே நீங்கள்,எம்மை விட்டு சென்றாலும்
 உம் நேசம் என்றும் மறவோம் ஐயா,
 உம்மை பிரிந்த வலியை விட இவ் உலகில்
 எந்த வலியும் பெரிதில்லை ஐயா,
 தண்ணீர் இல்லாத மீன் போல் தவிக்கிறோம் ஐயா,
 பாசத்திற்கு ஏங்கும் பிள்ளையாய் பரிதவிக்கிறோம் ஐயா,
 எத்தனை ஆண்டானாலும் உங்கள் நினைவு மாறாது ஐயா,

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்