Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1930
இறப்பு 05 JAN 2013
அமரர் வைத்தி கணபதிப்பிள்ளை
வயது 82
அமரர் வைத்தி கணபதிப்பிள்ளை 1930 - 2013 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எழுதும் வரியாவும் இவ்வாண்டு- உமது
எட்டாம் ஆண்டொன்று நினைவுபடுத்துகிறது
ஐயா
காலம் கடந்தாலும் கடக்க முடியவில்லை
உம் நினைவுகளை- ஐயா

உம் வழி கொண்டு
உலகை அறிந்தோம்- இன்று
எம் கண்வழி கண்ணீராய்
உமை உணர்கின்றோம்- ஐயா

குடும்பத்தின் தளைச்சுடரே
நீர் அணைந்து
இந்த குடும்பத்தை
இருள் மயமாக்கிவிட்டீரே
உம் அன்பொளிக்கு- நிகர்
இங்கு எவ்வொளியும் இல்லை- ஐயா

இன்றும் அல்ல என்றும்
நீர் இல்லாத்துயர்- மனதை
சூழ்ந்து கொண்டுதான் இருக்கும்- ஐயா

இன்றும் உம் உடல் பிரிந்து சென்றாலும்
உம் ஆசீர்வாதம்
எம்முடன் இருக்குமென
மனச்சாந்தி கொண்டு
உம் பாதத்திற்கு
மலர்ச் சாந்தி செலுத்துக்கின்றோம்
ஐயா....


தகவல்- க.கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), க.அகிலன்(நோர்வே Oslo)

தகவல்: மகன்கள்