7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் எழவில்லை உம் நினைவு
ஏழாண்டு கடந்த பின்பும்
என்றும் எமக்கு அன்பு பாராட்டீனிரே அய்யா
எப்படி உமை எம் இமைக்கண் மறப்பது
ஆயிரம் ஆசைகள் அய்யா
உமை எம் கண் காண
அனைவரையும் எதிர்த்தாவது
உம் அரவணைப்பை காட்டீனீரே
உம் போல் தலைமையை
நினைத்தாலும் ஈடுசெய்ய முடியாது எவராலும்
நீர் அற்ற வீடு நிலையில்லா
தீபம் போல் தள்ளாடுகிறதே- அய்யா
நிலையில்லா உலகினிலே
நிஜமற்ற மனிதர் மத்தியிலே
வாழ வைக்கும் தெய்வமாய்
எமை காத்தருளும் - அய்யா
இந்நினைவுநாள் அன்று கண்கள் சொரியும்
கண்ணீர் மலர்த்துகளை
உம் பாதத்தில் செலுத்துகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்போடு நினைந்து அஞ்சலி செய்து ,ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுவோம் .