9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளிக்கீற்றின் பார்வைதனில்
வளர்ந்து வரும் மரம் போல்- உம்
அரவணைப்பில் எமை கைவசம்
கொண்டு ஆளாக்கினீர்- ஐயா
ஒன்பது ஆண்டுகளாக அந்த
பாசத்தின் பாரத்தை இழந்து
தவித்துக் கொண்டிருக்கின்றோம் ஐயா
காலத்தின் கட்டளையோ ஐயா
எமை தவிக்கவிட்டு சென்றீரோ
கண்கலங்கி நிற்கும் எம்முன்
கடவுளாகிப் போனீரோ
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முன் அகலாது- ஐயா
ஒப்பிலா உமை இறைவனிடம்
ஒப்படைத்த இந்த ஒன்பதாம் ஆண்டில்
உம் மாசில்லா ஆத்மாவிற்கு
மலர்தூவி சாந்தி செய்கின்றோம்...
தகவல்:
க.கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), க.அகிலன்(நோர்வே Oslo)
அன்போடு நினைந்து அஞ்சலி செய்து ,ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுவோம் .