Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 31 MAY 1947
உதிர்வு 27 FEB 2024
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் (மணியம்)
முன்னைநாள் உருத்திரபுரம் மாணிக்கபிள்ளையார் ஆலய தலைவர், உருத்திரபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர், உருத்திரபுரம் கமக்கார அமைப்பு உறுப்பினர்
வயது 76
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் 1947 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி:06/03/2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 127, D 10 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் நாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு சொரிந்து அறநெறி வளர்த்து
நெஞ்சத்து நேர்மை தந்து கொஞ்சிக் குலாவி
குதூகலத்தால் தினம் பட்டாம் பூச்சியாய்
எமை வளர்த்த ஆசானே!

நீரின்றி நிலை குலைந்து நிற்கிறோமே நாம் இங்கு
ஆண்டிரண்டானாலும் ஆறவில்லை எம் இதயம்.

முகத்திலே புன் சிரிப்பு விருந்தோம்பலுக்கு பஞ்சமில்லை
பறத்திலே சமூக சேவை வாக்கிலே
தெளிவு வார்த்தையிலே நாணயம் வாழ்விலே
விறுவிறுப்பு வயலிலே பெரும் சுறுசுறுப்பு
ஓடும் மேகமாய் ஓடித்திரிந்த
நீங்கள் போதும் என்று புறப்பட்டதேனோ…..
ஆல மரம் சாய்ந்ததால் அவதியுற்று
நாமிங்கு அலறுகிறோம் அல்லலிலே
ஆண்டிரண்டானாலும் அழுகுதய்யா எம் இதயம்

சாந்தி!சாந்தி! சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்