Clicky

மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
செல்வன் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
செல்வன் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

அன்புக்குரிய அக்கா ஷாகரி 22 JAN 2025 Sri Lanka

என் அன்புக்குரிய தம்பி த்ரிஷான் என்னால் நீங்கள் இல்லை என்ற செய்தியை இன்று வரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் சிலநேரங்களில் உங்களுக்கு text பண்ணாமல் விடுவேன் ஆனால் நீங்கள் என்னை மறக்காமல் “ hi shakarie ” என்ற குறுந்செய்தி வரும். இனி அந்த குறுந்செய்தி வராது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திங்கட்கிழமை உங்களது நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் “ இன்று எனக்கு பாடசாலை முதல் நாள் ” என்ற குறுந்செய்தி எனக்கு வந்தது திடீர் முழிப்பு வந்து எழும்பி “ ஓகே தம்பி ” என்று நான் பதில் அளித்தேன். அந்த குறுந்செய்தி நீங்களும் பாத்தீர்கள் மறு நாள் காலையில் இப்படி ஒரு செய்தி வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. போன வருடம் இலங்கை வந்த போது நானும் நீங்களும் எவ்வளவு சந்தோசமாக நடந்து திரிந்தோம். சாப்பிடுவதில் கூட ஒன்றாக சாப்டோம். பெரியம்மா கூட ஒன்றாக கோவில் சென்றோம் நடை பயிற்சியில் யாரு கூடுதலான பெறுமதி எடுக்கின்றோம் என்று போட்டி போட்டோம். ஒரு தடவை உங்கள் ஊரில் இல்லாத உணவை இங்க சாப்பிடணும் என்று சொன்னீர்கள் மறுநாள் நான் , நீங்கள், ஸ்ருதி, ஷாகாஷ் 4 பேரும் சித்தி காசு தர போய் அத்தனையும் சாப்டோம் அத்துடன் நாங்கள் நல்லா fun செய்தோம். சில உணவுகளை சாப்பிட்டால் பெரியம்மாக்கு புடிக்காது அதனால் பெரியம்மா கேக்கும் பொழுது எல்லாம் “நாங்கள் அங்கே சென்றோம் இங்கே சென்றோம் ” என்று கூறி சமாளிப்போம்.எங்கள் எல்லோருடைய அனுபவதில்லையே “ சந்தோசம்” மட்டும் தான் உள்ளது. இப்போது வரை எனது மனம் ஏற்றுகொள்ளுதில்லை. இன்று 14 பேரப்பிள்ளைகளில் ஒருவர் இல்லை என்பது எங்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது. “But heaven is so lucky to have you ” நீங்கள் கடைசியாக இங்கே வந்த போது சித்தி “ தம்பி அடுத்த முறை நீங்கள் உழைத்து அம்மம்மாவுடைய சாமான்களை வாங்கி கொடுக்க வேண்டும் ” என்று சொன்ன வார்த்தை மட்டும் தான் எனது மண்டைக்குள் ஓடி கொண்டு இருக்கிறது. நீங்கள் uk செல்வதற்காக van இல் ஏற முதல் கடைசியாக நீங்கள், நான், ஸ்ருதி போட்டோ எடுத்தோம். அதுதான் கடைசியா உங்களோடு எடுப்பம் என்று நினைக்கவில்லை .இனி மேல் எங்கள் பழைய சித்தியை எப்படி பார்ப்போம். நீங்கள் எப்போதும் எங்கள் மனதில் இருப்பிர்கள். உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி

Tributes