

விட்டுசென்றாயோ அப்பனே..... அன்பே உருவான அம்மாவின் உலகமே! பார்த்து பார்த்து வளர்த்து பரிதவிக்கும் அம்மா, என் செல்லமே! என்று துடிக்கும் உன் அப்பம்மா, என்ர பிள்ளை எங்கே? என்று ஏங்கும் உன் பெரியம்மா, பித்து பிடித்ததுபோல் துடி துடிக்கும் உன் தந்தை, தம்பி தம்பி... என்று ஏங்கும் உன் அண்ணா அக்காமார், எங்கே? என்று ஏங்கி தவிக்கும் நண்பன், உன் வதன முகம் தேடும் உறவுகள்... எங்கு சென்றாய் கண்ணா? கண்கள் கடலாகிறதே கண்முன்னே வாழ்ந்துவிட்டு கனவாகி காற்றோடு கலந்தாயோ? உன் அன்பிற்கும் பண்பிற்கும் இணை வேறுயாரு அப்பனே! ஆங்கிலத்தில் உரையாடினால் கொஞ்சும் மழலை தமிழில் பதில் தந்திடுவாயே கள்ளம் கபடம் இல்லா நெஞ்சமே, கல்வியை கடைசிவரை கற்கண்டாக கற்றவனே! கல்நெஞ்சக்காரனா? கடவுள் என தோன்றுகிறதே, ஈரெட்டு வயதினில் ஈசனின் மடியில் அமர்ந்தாயோ! எங்கள் எல்லோர் இதயத்திலும் அத்தனை அன்பை விதைத்துவிட்டு, வெற்றிடமாக்கிவிட்டு விடைபெற்று சென்றாயோ? பாடசாலை விவகாரங்களை வினவினால் விபரமாக விடைதருவாயே கண்ணா, துள்ளி திரிந்த பாலகனே... உன் மழலைத் தமிழை நாம் எப்போது கேட்போம்? காசுக் கணக்கு பார்த்து பார்த்து சேர்த்து கச்சிதமாக முடித்து, உன் அன்னைக்கு பெருமை சேர்த்தாயே! உன் தூய உலகில் நித்தியமாக இன்புற்றிருக்க இறைவனை பிராத்திக்கின்றேன் அன்புடன் நண்பனின் அம்மா

sample