Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
செல்வன் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
செல்வன் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா - என்று நினைக்கும்
முன்னே நீ மறைந்தது ஏனோ?

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?

நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா! உதிர்ந்து
நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 57 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Jan, 2025