Clicky

பிறப்பு 13 JAN 1937
இறப்பு 07 AUG 2026
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி
வயது 89
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mrs Thuraisamy Thangeswary
1937 - 2026
Screen shot

வீடற்று வாசலற்ற நின்ற வேளை தனது நிலத்தில் எமக்கு இடம் கொடுத்தார் எமது மனதில் அன்னையாய இடம் பிடித்தார் சொந்தத் தோட்டத்து மரக்கறிகளும் எமக்களித்தார் உண்ணும் உணவிலும் எமக்குப் பகிர்ந்தளித்தார் கவலைகள் எம்மைச் சூழ்ந்த வேளை கலகலப்பாய் பேசி மனதுக்குத் திடம் கொடுத்தார் தங்கமாய் ஜொலித்தார்… தாராள மனதுக்காரி…!! செழுமை நிறைந்த தயாள மனம் எளிமை நிறைந்த அன்பான குணம்…!! நீண்ட காலமாய் கண்ணால் காணவில்லைத்தான் மீட்டும் நினைவுகளில் சிரித்த முகத்துடன் என்னாளும் எம் சிந்தையில் பரிபூரணமாய்…!! அன்னையின் ஆத்மா ஆண்டவன் அடியில் இணைந்திருக்கும் ஓம் சாந்தி…!! அம்மாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாரின் மீளாத் துயரில், நானும் எனது குடும்பமும் எமது ஆழ்ந்த துயரைப் பகிர்ந்து கொள்கிறது…!! நிறைந்த வாழ்வு வாழ்ந்து, சொர்க்கத்துக்குச் சென்றுள்ள தங்கேஸ்வரி அம்மாவை, நன்றியுடன், எந்நாளும் மறவாத: முத்துக்குமாரு பமேஸ்லரன்(குழந்தை), குமுதேஸ்வரி(ராணி), அபராஜிதன்(உமேஷ், அனந்தினி, அனபாயன்(வாசவன்).

Write Tribute

Tributes