Clicky

பிறப்பு 13 JAN 1937
இறப்பு 07 AUG 2026
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி
வயது 89
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்குரிய தங்கேஸ் அக்கா அவர்களின் நினைவாக… என் சிறுவயதில் எங்கள் அயலவராகவும், எங்கள் குடும்பத்தின் அன்பான நண்பராகவும் இருந்த தங்களை இன்று கனத்த இதயத்துடன் நினைவுகூர்கிறேன். என் அம்மா (லலிதாதேவி ஸ்ரீவிசாகராஜா) தங்களை அன்புடன் “தங்கேஸ் அக்கா” என்று அழைத்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. நாங்களும் அப்படியே அந்தப் பெயருடன் அழைத்ததும் என் சிறுவயது நினைவுகளும், அயல்வீட்டு உறவுகளின் அன்பும், குடும்பங்களுக்கு இடையே நிலவிய நெருக்கமும் என்றும் இணைந்திருக்கும். காலம் கடந்தாலும், தங்களைப் போன்ற அன்பான மனிதர்களின் நினைவுகள் ஒருபோதும் மறைவதில்லை. தங்களின் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்களை இழந்து துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பெருந்துயரைத் தாங்கிக்கொள்ள இறைவன் அனைவருக்கும் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்குவாராக. தங்கேஸ் அக்காவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பான நினைவுகள் எங்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
Write Tribute

Tributes