Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 JAN 1937
இறப்பு 07 AUG 2026
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி
வயது 89
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், ராசாவீதியை வாழ்விடமாகவும், தற்போது ஜேர்மனி Holzwickede ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தங்கேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அம்மாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், கமலேஸ்வரி யோகநாதன்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்