யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருசெல்வம் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்புத்தெய்வம் இறைபதமடைந்த செய்தியறிந்து எம் இல்லத்திற்கு வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், நேரில் வரமுடியாமல் இருந்தும் எங்களுடன் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் அனுப்பியவர்களுக்கும், எம் தெய்வத்தின் இறுதிக் கிரியைகளில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், இறுதிக்கிரியைகளைச் சிறப்புற நடாத்தித்தந்தோருக்கும், மலர் அலங்காரங்களைச் செய்தோருக்கும், இத் துயரச் செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்த உதவிய அனைத்து ஊடகங்களுக்கும், தேவாரத் தோத்திரங்கள் பாடியவர்களுக்கும், மலர் வளையங்கள் சமர்ப்பித்தவர்களுக்கும், அந்தணப் பெருமக்களுக்கும் இம் மலரை அழகுற அமைத்துத் தந்தவர்களுக்கும் இருகரம் கூப்பி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.