3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
30
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருசெல்வம் கந்தையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் ஆளாத்துயரின்
அழுத்தத்தால் அல்லும் பகலும்
தவிக்கின்றோம் நாமிங்கு!
நீங்கள் இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
வேண்டிடும் பொழுதெல்லாம் உதவிகள் புரிந்தே
விரும்பிய யாவும் சேர்த்து வைத்தீர்களே!
ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்