Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 AUG 1938
மறைவு 13 NOV 2022
அமரர் திருசெல்வம் கந்தையா
வயது 84
அமரர் திருசெல்வம் கந்தையா 1938 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருசெல்வம் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 01-11-2023

ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது அப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் அப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள்  இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!

எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான
மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் அப்பா!

இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!

உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 15 Nov, 2022
நன்றி நவிலல் Tue, 13 Dec, 2022