உறவுகள் சேர்ந்திருக்க உன்னை இங்கு காணவில்லை. உண்மையில் இதை எம் உணர்வுகள் ஏற்கவில்லை. உனக்கேன் இந்த அவசரம் டிலோ..! வேலை வேலை என வேளைக்குப் போனதேனோ? சுடு நீர் குடித்து நீ சுத்தித்திரிந்த நேரம்- அவசர இலக்கங்களை நீ அழைக்க மறந்ததேனோ? மதி மயங்கியபோதும் மலர்ந்த உன் சிந்தனையில் .... உன் மனைவியை அழைத்து இரவு உணவு கேட்ட நேரம் உன் இயலாமை நிலையை மறைத்ததேனோ? சிரித்த உன் புன்னகை பூக்களை சிதறித் தெறித்ததேனோ!? வீழ்ந்தும் மீண்டெழுந்து விதியுடன் போராடி மாண்ட உன் உயிர் பிரிந்த சோகம் ஆழ எம் மனதில் ஆயிரம் ஆணி பதித்த வலி. ‘சும்மா’ சொன்னேன் என யாரும் சொல்லாரோ டிலோ...!? அண்ணா அண்ணி என நீ அழைத்த குரல் ஓய்ந்ததேனோ..!? காற்றோடு கை கோர்த்து எம்மை கதறவிட்டு சென்றதேனோ!? கட்டியவள் கதி என்னவென நீ எண்ணவில்லையோ!? உன் பச்சிளங்குழந்தைகள் நீ இன்றி பாவமில்லையோ!? ஜனனம்-மரணம் வாழ்வின் நியதிதான் இல்லை என மறுக்கவில்லை-இருந்தும் இதை எம் மனம் ஏற்கவில்லை, என்னத்தை வாழ்ந்துவிட்டாய் ஏழு ஆண்டுகளில்....!? எதை எண்ணித் தேற்றுவோம்? எம் மனதை அற்றுவோம்!? நிலையற்ற வாழ்வில் உன் நினைவுகளை சுமந்து நாமும் வாழ்கின்றோம். வந்துவிடு எம் நினைவுகளில்....! கலந்துவிடு எம் சுவாசத்தில்........!!
I mis u lots annoi