யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் டிலோஜன் அவர்களின் நன்றி நவிலல்.
இடிவீழ்ந்த பூஞ்சோலையில் இருந்து உனக்கொரு மடல்....
ஆழமாய் குழி பறித்து அதனுள்ளே நீ தூங்க
நினைவிழந்து நாம் நடை பிணமாக-உன்
ஞாபகங்கள் தரும் வேதணைகள் நரகமடா
உனை நினைத்து புழுவெனத் துடிக்குதடா எம் மனம்.
நாட்கள் நீண்டாலும் உன் ஞாபகங்கள்
நெஞ்சோரம் ....சாரலாக
இடைவேளை இன்றி செஞ்சை பதம் பார்க்க....
நீக்கல் பற்களுடன் உன் நீங்காத நிழல் கண்முன்னே...
அவசரமாய் உன் விம்பம் வந்து போய்
அடிக்கடி கண்களை கலங்க வைக்க ...
இனி எங்கே காண்போம்.....
இயலவில்லை இது ஏன் உனக்கு புரியவில்லை டிலோ....
கூடிக் கதை பேசிக் குதூகலமாய் கழித்த நாட்கள் வாடி வதங்கி , புண்பட்டு போக்கற்று ..,
உன் கதை பேசிக், கதை பேசிக் ,கதைபேசி நிக்கின்றோம்...
உறவுகள் ஒருசேர அழைத்தும் கேளாமல் தூங்காதே டிலோ!
புத்திக்கும் எட்டாத புதிரானதா உன் பிரிவு
புலம்பியல்லவா தீர்க்கின்றோம்.
‘எதுவும் புரியாத எம் தவிப்பு ‘பார்த்தாயா டிலோ?
எம் இதயம் துடிக்கும் ஓசை கேட்டுப் பல நாள் ஆச்சு
காதுபடும் பேச்செல்லாம் நீ ஆச்சு.
விழித்திரையில் உன் விம்பம் ......
விம்முதடா எம் மனம்.
ஆயிரம் ஆசைகளை அங்காங்கே சொல்லிவிட்டு
எம்மிடம் எதுவும் சொல்லாமல் ஏங்கே சென்றாய்?
ஆனதடா மாதமொன்று ஆண்டவன் ஆணையில் உன் பிரிவு.
உன் பிரிவுத்துயரில் எம்முடன் இணைந்த அனைவருக்கும் நன்றிகள் பல கூறி
உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவணை இரஞ்சுகிகின்றோம்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், மதிப்புக்குரிய அருட்தந்தை அவர்களுக்கும் உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
I mis u lots annoi