1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் தவராஜா
1925 -
2018
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 14-12-2019 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கனடா ஐயப்பன் கோவிலில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்