யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கடல் சூழ்ந்து வயல் நிறைந்து வளமிக்க
காரையாம் பதியில் வந்துதித்தவனே!
பெற்றோரும் மற்றோரும் சேர்ந்து
பெருமையுடன் வளர்த்த பெருந்தகையே!
தந்தையை இழந்து தவித்த குடும்பத்தை
தனியனாய் தாங்கிய பெருமகனே!
இளங்காளை மனங்கவர்ந்த இனியவளின் - கரம்பிடித்து
இல்லறத்தில் நல்லறத்தை நாட்டிய உத்தமனே!
மனமொத்த மணவாழ்வின் மகிழ்ச்சியால் வந்துதித்த - நன்
மக்களை பார்போற்ற வளர்த்தெடுத்த தந்தையே!
உனை நாடி வந்தோரை உளமகிழ்ந்து
உபசரித்து உதவிய சேவகனே!
கண்ணியமும் கடமையும் கற்று தந்து - நம்
கண்ணெதிரில் வாழ்ந்த வரலாறு நீ
சுற்றத்தார் சுமை தாங்கி சுகம்கண்ட - எம்
சுந்தரத் தலைவனே - உனக்கு
நிலையான மெளனமும் உறக்கமும் நிம்மதியானதோ?
நிலைகுலைந்து நிற்கின்றோம் நிர்க்கதியாய் நாம்
இம்மண்ணை நீ மறந்து இறைவனடி நீ சேர
இதயம் கனக்க இரு விழியில் நீர் பனிக்க
இரு கரம் கூப்பி உன் தாள் பணிந்து
இறைஞ்சுகின்றோம் இறைவனை உன் சாந்திக்காய்!
சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.