யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகாவும் கொண்ட தில்லையம்பலம் கமலாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!
உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை
உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
May your soul rest in peace mami. Our deepest condolences to entire family