

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகாவும் கொண்ட தில்லையம்பலம் கமலாம்பிகை அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், மனோன்மனி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருநாவுக்கரசு(திரு- ஸ்கந்தபுரம் விஸ்னு பல்பொருள் வாணிப உரிமையாளர்),வசந்தகுமாரி(வசந்தா), ஜெகதீஸ்வரன்(சுதன்), ஜெயசீலன்(மனோ), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா(புத்தளம்), விக்கிரைசா(சந்திரன்- வன்னேரி), விஜிதா(வன்னேரி), ஜீவா(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கமலாதேவி(ஸ்கந்தபுரம்), சீதாலக்சுமி(வன்னேரிகுளம்), சந்திரா(வன்னேரிகுளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கார்த்திகா, கஜன், விஸ்னு, கிருசாந், கபிசன், கஜானா, கவிசாளினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
விஜிதரன்(சுவிஸ்), வினோதரன், விதுஷா(பெரண்டினா Micro finances), தாரணி, துஷாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இல. 90/3 ஐயனார்புரம், வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு ஐயானாந்தபுரம் இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May your soul rest in peace mami. Our deepest condolences to entire family