Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JUL 1930
இறப்பு 30 APR 2020
அமரர் தவமணி பாலசிங்கம் 1930 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!

ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!

இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர

ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!

எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற தாயே!

உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவுகளுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்