Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JAN 1950
இறப்பு 04 JUL 2025
அமரர் தவமணிதேவி சதாசிவம்
வயது 75
அமரர் தவமணிதேவி சதாசிவம் 1950 - 2025 வடமராட்சி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு நாகர் கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணிதேவி சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி தேதி: 24-06-2026

என்னவளே!
என்னையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு
ஆண்டு ஒன்று ஆனதம்மா!

காதல் என்றால் சேய் ஆவேன்
கருணை என்றால் தாய் ஆவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன் என வாழ்ந்தவளே!

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!
உள்ள உணச்சியை
வார்த்தையில் வடித்துச் சொல்ல!

நின்றால் நடந்தால் உன் நினைவு
உன் நினைவே அகன்றால் உன்கனவு
நீயர்ற நானாக ஆண்டு ஒன்று ஆனதம்மா!


அன்பின் திருவுருவே அம்மா...

ஆண்டு ஒன்று கடந்துவிட்டது... ஆனால்
 நீங்கள் எங்களை விட்டு பிரிந்த
அந்த நாளின் வலி, இன்றும் எங்கள் இதயங்களில்
 மறையாத காயமாகவே இருக்கிறது.

 ஒவ்வொரு காலையிலும் உங்கள்
 குரலைக் கேட்க மனம் தேடுகிறது.
ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் உங்களிடம் சொல்ல
ஓடிவர வேண்டும் போலத் தோன்றுகிறது.
ஒவ்வொரு துயரத்திலும் உங்கள் மடியில்
 சாய்ந்து அழ வேண்டும் என்று ஏங்குகிறது. 

நீங்கள் எங்களுக்கு ஒரு தாய் மட்டுமல்ல,
 எங்கள் உலகம்... எங்கள் ஆறுதல்...
எங்கள் நம்பிக்கை... எங்கள் முதல் தோழி...

எங்கள் சிரிப்பின் பின்னாலும்,
எங்கள் அமைதியின் உள்ளேயும்,
உங்களை இழந்த ஏக்கம் ஒவ்வொரு நாளும்
 பேசிக்கொண்டே இருக்கிறது. 

உங்கள் அன்பான அழைப்பு,
உங்கள் பாசமான பார்வை,
 எங்களுக்காக நீங்கள் செய்த தியாகங்கள்,
இவை அனைத்தும் எங்கள் வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியாத நினைவுகள். 

அம்மா... உங்கள் அன்பு எங்கள் இதயத்தில்
என்றும் உயிரோடு இருக்கும்.
உங்கள் நினைவுகள் எங்கள் கண்களில்
 என்றும் கண்ணீராக இருக்கும்.

உங்களை மீண்டும் காண முடியாத ஏக்கத்தோடு,
உங்களை என்றும் நேசிக்கும்
உங்கள் பிள்ளைகளாகவே நாங்கள் இருப்போம்...

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos