Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 JAN 1950
இறப்பு 04 JUL 2025
திருமதி தவமணிதேவி சதாசிவம்
வயது 75
திருமதி தவமணிதேவி சதாசிவம் 1950 - 2025 வடமராட்சி கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு நாகர் கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சதாசிவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எமைவிட்டு
 அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புச் செல்வமே...

 31 நாட்கள் எமைப்பிரிந்து சென்றதனை
 ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
 உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்

நனவாகும் காலம் வருமுன்னே
 கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!
 உதிர்ந்து நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
 உறைந்திருக்கும் அம்மா!!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் சபிண்டீகரண நிகழ்வு நடைபெறும். அன்றைய தினமே Canada Kanthaswamy Temple, 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 இல் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அதேநாள் இலங்கை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டு, சேவில் லேன் தும்பளையில் உள்ள அவரது மகளது வீட்டில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதியபோசன நிகழ்வும் நடைபெறும். இந்நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்