11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி செபரெட்டினம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உதிரத்தை
உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என்
உருவம் தந்தாயே அம்மா!
இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று
வாழும் காலத்தில் வையத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப்
பிடித்த எங்கள் தெய்வமே!
பதினொன்று காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
இன்பமோ துன்பமோ இனிமையோ கசப்புணர்வோ இயலுமோ இயலாமையிலோ இரவிரவோ பகல்களிலோ இல்லறத்தில் இதுகாறும் பிசகியதை நாமறியோம். இத்தனைக்கும் பண்பு மிக்க ஆசிரியாய், இல்லாளாய், அக்காளாய், அம்மாவாய், இறைபக்தி...