Clicky

பிறப்பு 30 APR 1953
இறப்பு 29 DEC 2020
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
TGS Auto Service- உரிமையாளர்
வயது 67
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம் 1953 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Theivendram Sarathadevi 03 JAN 2021 Canada

வடலியடைப்பை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் தர்மபாலன் 29-12-2020 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.. ?கடமைகள் எல்லாம் முடிந்தது என்று காலனவன் சித்தப்பாவை அழைத்துவிட்டான். ?உடன் பிறந்த சகோதரங்கள் 12 கிளைகளில் இரு கிளைகள் இன்றி துடிதுடித்துப்போனார்கள்..... ?மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்,பெறாமக்கள் என்று எல்லா உறவுகளும் உங்களின் இழப்பை ஈடுகொடுக்கமுடியாமல் பரிதவித்து போனார்கள் .... ? ஆயிரம் உறவுகள் இங்கிருக்க இறைவனவன் உங்களை அழைத்துவிட்டான் சித்தப்பா...! ?ஆலமரம் போல் இருந்த சுப்பிரமணியம் குடும்பத்தின் மூத்த அண்ணன், அக்காவிற்கு அடுத்த ஆண்மகனாம் பாலன் இன்று மறைந்துவிட்டார் என்று எங்களால் உங்கள் துயரை தாங்கமுடியவில்லை சித்தப்பா...! ? எல்லா சந்தோசங்களையும் உங்களுக்கு குறைவின்றி கொடுத்த இறைவனால் இன்னும் கொஞ்சகாலம் எங்களுடன் மண்ணுலகத்தில் வாழ்வதற்கு இறைவன் வரம் தராமல் விண்ணுலகம் சென்றுவிட்டீர்கள் சித்தப்பா....! உங்களுடைய ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம் ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி?