

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாம் கண் திறந்த போது
உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
ஆயிரம் சொந்தங்கள்
அருகினிலே இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் யார் வருவார்
அன்புள்ள அம்மா!
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
ஆனால் இமைப் பொழுதில் காலன் உம்மைக் கவர்ந்துவிட்டான்
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
இன்றோடு ஐந்தாண்டுகள் ஆகின்றன!
ஆனால் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும்
எப்பொழுதும் எங்களுடன் தான் இருக்கின்றது...