1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மேஸ்வரி இராஜரட்ணம்
1932 -
2020
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்