திதி: 03/04/2024 (புதன்கிழமை)
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் கிரிசாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இவர், வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியை சேர்ந்த வேலாயுதபிள்ளை தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியார் ஆவார்.
அன்பின் முகவரியே அம்மா
மனிதருள் மாணிக்கமே மாசில்லாத் தங்கமே
தியாகத்தின் உருவமே மகத்தான தாயே
பொறுமையின் சிகரமாய் நீங்கள் இருந்தீர்கள் தாயே
கொடைதனிலில் கோபுரமாய் நீங்கள் இருந்தீர்கள் தாயே...!
வருடமொன்று சென்றதம்மா உங்கள் குரல் கேளாது
அன்பு காட்டி எமை அரவணைத்து புன்னகைத்த வண்ணம்
உறவுகளோடு உறவாடி நீங்கள் சென்றீகள்
தரணியிலே நாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு
உங்களை உருக்கி எமை வளர்த்தெடுத்தாய் தாயே..!
நீங்கள் அணைந்து போனதால் நம் இல்லம்
இருளாகி போனதம்மா
உமை இழந்து நாமெல்லாம் உருக்குலைந்து போனோமே
வலியோடு தவிக்கின்றோம் உம் நினைவோடு எந்நாளும்
எத்தனை பிறப்பிலும் உங்களுக்கு பிள்ளைகளாய்
பிறந்திட இறைவனை வேண்டி - உம்
ஆத்மா சாந்தியடைய வணங்குகிறோம்
நன்றி தாயுனக்கு..
ஓம் சாந்தி...சாந்தி...சாந்தி...