யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ஆம் வட்டாரம், கிளிநொச்சி இராமநாதபுரம் 7 ஆம் யூனிற், மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி ஆனந்தபுரத்தினை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தங்கம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த
எம் அம்மாவே! அப்பம்மாவே! அம்மம்மாவே!
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்? அம்மா
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மை
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியை 22-03-2023 புதன்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெற வுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
எண் 441, ஆனந்தபுரம் கிழக்கி,
கிளிநொச்சி.