Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 14 MAY 1943
இறப்பு 16 JAN 2025
திருமதி தங்கலெட்சுமி கனகரெத்தினம் (செல்லம்)
வயது 81
திருமதி தங்கலெட்சுமி கனகரெத்தினம் 1943 - 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கலெட்சுமி கனகரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே

விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே

சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?

நாட்கள் 31 கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31 ம் நாள் நினைவஞ்சலி 15-02-2025 சனிக்கிழமை அன்று பி.ப 1.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை நடைபெறும். அத்தருணம் தங்கள் குடும்பத்தின் சார்பாக வருகை தந்து உணவருந்தி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி: 
HOTEL ATELIER 15 15 , Boulevard Victor Hugo , 93400,Saint ouen Metro -Mairie de -saint -ouen (ligne - 13 and 14 )   

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.