யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கலெட்சுமி கனகரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-02-2026
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் - அம்மா
உன் அன்பு முகம் எம்மை விட்டு மறையவில்லை!
புங்குடுதீவின் திருமகளாய் பிறந்து
பாரிஸ் மாநகரில் எமைக் காத்து நின்ற தெய்வமே!
பாசத்தின் உறைவிடமாய் எமை வளர்த்தாய்
பண்பின் சிகரமாய் எம் வாழ்வில் ஒளிர்ந்தாய்!
கணவர் காலடியில் நீ சேர்ந்த போதிலும் - எம்
கண்ணீரில் உன் பிம்பம் இன்றும் அசையுதே!
ஆறாத் துயரில் நாம் தவித்துக் கிடக்கிறோம்
ஆறுதல் சொல்ல நீ எங்கே போனாய்?
உன் சிரித்த முகம் ஒன்றே எம் துணையாகும்
உன் திருநாமம் என்றும் எம் நினைவாகும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப்பிள்ளைகள்