6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தாமு சோமசுந்தரம்
சங்கீத வித்துவான் மெக்கானிக் சோமு
வயது 87
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமு சோமசுந்தரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐயா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்