

திதி:18/02/2025
யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு ஐந்து சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
ஆண்டு ஐந்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!