1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
(வரதன்)
முன்னாள் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்- டிறிபேர்க் கல்லூரி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- முறைசாராக் கல்விப் பிரிவு, தென்மராட்சி
வயது 72

அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
1947 -
2020
Kachcheri, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாடா மலராய் எம் சோலையில் பூத்த மலர்தனை
காலன் கிள்ளி எடுத்து ஆண்டு ஒன்றானதோ?
ஆண்டு பல ஓடினும் எம் மனங்களில் மாலையாக
நிறைந்து மணம் வீசியே இருப்பீர்கள்!
பறித்து விட்டான் இறைவனவன்
உங்கள் மேலுள்ள ஆசையாலே;
பறி கொடுத்து விட்டோமே நாம் உங்களை
என்ன பாவம் செய்திருப்போமோ?
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றோம்
கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்