யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, அரியாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சின்னத்துரை அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்), ஜெயந்தி(கனடா), நிர்மலா(கனடா), கெளரி(கனடா), விவேகானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன்(ஓய்வுபெற்ற CTB சாலைப் பரிசோதகர்), இராசுரட்ணம்(கனடா), காலஞ்சென்ற சுதந்திரராஜன்(பொறியியலாளர், கனடா), வசீகரன்(கனடா), நிலானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வைரவி, சின்னாச்சி, தம்பிராசா, அன்னம்மா மற்றும் அப்புத்துரை(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்து(அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), ராகவி(ஆசிரியை, வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலை), ஜிந்துசன்(மென்பொறியியலாளர், லண்டன்), அனித்தா(கனடா), நிருபா(கனடா), மதுசங்கர்(கனடா), பிரதிகா(கனடா), ஆகாஷ்(கனடா), நிதுஷா(கனடா), விதுசன்(சுவிஸ்), லக்ஷன்(சுவிஸ்), ரோஷன்(சுவிஸ்), வினோத்(ஆசிரியர், கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை), சிவகெளதமன்(நிறைவேற்று உத்தியோகத்தர், CBC வவுனியா), பார்த்திபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷப்தகி(மாணவி, யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), சந்தோஷ்(மாணவன், யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பாபு அண்ணாவின் அப்பா இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி கேட்டு கவலையடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம...