Clicky

பிறப்பு 22 MAY 1948
இறப்பு 14 JUL 2021
அமரர் தம்பித்துரை தவராஜா
Mechanical Engineering Consultant (Oil & Gas) Norway, France, Monaco, Abu Dhabi, Malaysia
வயது 73
அமரர் தம்பித்துரை தவராஜா 1948 - 2021 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Rajan Chelliah 03 AUG 2021 Norway

மனதில் என்றும் நிலைத்து நிற்கின்ற தவராஜா அண்ணர்… தவராஜா அண்ணர் லண்டனில் மறைந்த செய்தியை நெருங்கிய நண்பனொருவன் நேற்றையதினம் தெரிவித்தான். சிறிதுகாலமே பழகினாலும் சிலர் ஏற்படுத்தும் தாக்கம் மனதில் ஆழமாகப் பதியும். அப்படியான ஒருவரே தவராஜா அண்ணர். நான் நோர்வேக்கு இடம்பெயர்ந்த 83இல் இங்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்துவிட்ட புதியதொரு சூழலில் தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் இணைந்த பலரில் அவருமொருவர். பொறியியலாளராக நோர்வேயில் பணியாற்ற வந்தவர். எம்மைவிட பல வயதில் மூத்தவராக இருந்தாலும் சகல விதமான செயல்ப்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தவர். விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடமே ஒரு வாகனமிருந்த காலமது. தேவைப்படும் நேரத்திலெல்லாம் தனது காருடன் வந்து நிற்பவர் தவராஜா அண்ணர். எப்பொழுதும் ஒரு புன்முறுவலை உதிர்த்தபடி இருப்பார். தாயகத்தின் தேவைகள், அமைப்புக்களை ஒருங்கமைக்கவேண்டிய வழிவகைகள் பற்றி கூரியபார்வை கொண்டிருந்தார். இதனால்தான் இலண்டனிற்கு அவர் மீள்குடிபெயர்ந்தபின்னரும் அங்கு இருந்த பல அமைப்புகளுடனும் இணைந்து பொறுப்புணர்வுடன் செயல்ப்பட்டிருக்கிறார். இறுதிக்காலங்களில் பழைய நினைவுகளை அவர் மறந்திருந்தாராம். அண்ணரை எனது நண்பன் ஒருதடவை லண்டனில் சந்தித்தபோது நோர்வே அனுபவங்களைப் பற்றிப் பேசியிருக்கிறான். அவரின் நினைவுஅடுக்குகளில் அவை தவறியிருந்திருக்கிறது. இருந்தும் அவன் கூறியதை தனது கனிவான பார்வையுடன் கேட்டுக்கொண்டிருந்தாராம். அண்ணர், என்னைப் போலவே உங்களுடன் பழகிய பலரும் உங்கள் எளிமையைப் பற்றியும் உங்கள் நல்ல பண்புகளைப் பற்றியும் நினைவுகூர்ந்துகொண்டிருப்பர் இப்போதும். சென்றுவாருங்கள்! Rajan Chelliah, Norway Posted orginally on FB

Tributes