மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அண்ணர், என்னைப் போலவே உங்களுடன் பழகிய பலரும் உங்கள் எளிமையைப் பற்றியும் உங்கள் நல்ல பண்புகளைப் பற்றியும் நினைவுகூர்ந்துகொண்டிருப்பர் இப்போதும். சென்றுவாருங்கள்!