1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 JAN 1961
விண்ணில் 06 AUG 2021
அமரர் தம்பிராஜா கிறிஸ்டியன்
வயது 60
அமரர் தம்பிராஜா கிறிஸ்டியன் 1961 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா கிறிஸ்டியன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்."

(‭‭2 தீமோத்தேயு‬ ‭4:7-8‬)

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
 நினைவுத் துளிகள் விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

மீண்டும் ஒரு ஜென்மத்தில் நீங்களே
எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!
 என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள்
கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!

உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி, பிள்ளைகள்,

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 09 Aug, 2021