1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பையா பொன்னுத்துரை
வயது 94
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பொன்னுத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா....
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்