யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எங்கள் உலகமே நீங்கள் தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தாய் அம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்
எங்கள் ஆருயிர் அம்மாவே!
எங்களிடம் திரும்பவும் நீங்கள் வந்துவிடு!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவதில்லை மானிடர் இயல்பு இதுதான் என்று
மறக்கவும் முடியவில்லை அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
உங்கள் 85 வயசிலும் ஊரில் உள்ள பிள்ளைகளை கூட்டி இலவசமாக கல்வி புகட் டியதையும், இடுகாட்டிலும் விதிவிலக்காய் பெண்கள் வந்து அஞ்சலி செலுத்தியதே உங்கள் நல் மனதிற்கு சாட்சி..!
Please accept my heartfelt condolences in your bereavement and irreparable loss. She was a good friend of my late mother Maheswary Karthigesu. I had the privilege of meeting her many times in our...