யாழ்ப்பாணம் பிரான்பற்று சூரிய வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Uxbridge வை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் சிவபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே நீ மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ
கண்ட பல கனவிலும் வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
உதிர்ந்து நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால் வாடும்
குடும்பத்தினர்..!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் அன்பு தம்பி சுதர்சன் கலகல நீ இருக்கும் இடம் எல்லாம் உறவுகளை சிரிக்க வைத்திடுவாய். குறும்புகள்...