Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1941
இறப்பு 09 SEP 2025
அமரர் சுசிலாதேவி இராஜசுந்தரம் 1941 - 2025 Ipoh, Malaysia Malaysia
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 மலேசியாவைப் பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் கொக்குவில் , கோயம்புத்தூர் இந்தியா மற்றும் New Jersey ஐக்கிய அமெரிக்கா , Ipoh மலெசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி இராஜசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

A year has passed since you left,
yet your presence still walks beside us.

You were our first navigator,
long before we knew life would need a compass.

You taught us not merely where to go,
but how to think when the path was uncertain.

You taught us to question what we saw,
to seek reason beyond appearances,
to stand accountable for our choices,
and to face life with courage and clarity.

Only later did we understand
that you had given us the compass
before life presented us with the journey.
Today, you are no longer here to guide us,
but your lessons still do.

The navigator is gone,
but the compass remains.

And with every step we take,
a little of you lives on— quietly,
unfading, forever guiding us.

நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஓர் ஆண்டு கடந்துவிட்டது;
ஆயினும், உங்கள் நினைவு எங்கள் ஒவ்வொரு நாளிலும்
நிழலாய் தொடர்ந்து நடக்கிறது.

வாழ்க்கைப் பாதையின்
திசைகள் எதுவென்று அறியும் முன்னரே,
எங்கள் முதல் வழிகாட்டியாக
நீங்கள் இருந்தீர்கள்.

எங்கே செல்வது என்பதை மட்டும் அல்ல,
பாதை மங்கும் வேளைகளில்
எப்படிச் சிந்திப்பது என்பதையும்
நீங்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள்.

காண்பதை மட்டும் நம்பாமல்,
காரணத்தைத் தேடவும்,
எங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்கவும்,
துணிவுடனும் தெளிவுடனும்
வாழ்க்கையை எதிர்கொள்ளவும்
நீங்கள் கற்றுத் தந்தீர்கள்.

பின்னர்தான் உணர்ந்தோம்— வாழ்க்கை
எங்களிடம் பயணத்தை ஒப்படைப்பதற்கு முன்பே,
அந்தப் பயணத்திற்கான திசைகாட்டியை நீங்கள்
எங்கள் கைகளில் வைத்துவிட்டீர்கள்.

இன்று எங்கள் கரங்களைப் பிடித்து
வழிநடத்த நீங்கள் அருகில் இல்லை;
ஆனால் நீங்கள் விதைத்த எண்ணங்களும்,
நீங்கள் தந்த நெறிகளும் இன்றும்
எங்கள் பாதையை ஒளிரச் செய்கின்றன
வழிகாட்டி மறைந்துவிட்டார்; ஆனால்
அவர் தந்த திசைகாட்டி இன்னும் எங்களிடம் உள்ளது.

நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்,
நீங்கள் எங்களுக்குள் ஒரு சிறு ஒளியாக வாழ்கிறீர்கள்—
அமைதியாக, அழியாமல், என்றென்றும்
எங்களை வழிநடத்திக் கொண்டே

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்